×

கோத்தகிரி அண்ணா நகர் பகுதியில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பி

*மரத்திலான மின் கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை அண்ணா நகர் பகுதியில் உயரழுத்த மின் கம்பி வீட்டின் மேற்கூரையில் தொட்ட செல்வதால் மாற்றி அமைக்க குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை அண்ணா நகர் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் மின்சார கம்பங்கள் முறையாக பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இந்நிலையில் ஒரு குடியிருப்பின் மேற்கூரையை தொட்டவாறு செல்வதால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், மின்வாரிய ஊழியர்கள் மரத்தினால் ஆனா கம்பத்தை தற்காலிகமாக அமைத்துள்ளனர். எனினும் முறையாக மாற்று மின்கம்பம் அமைத்து உரிய தீர்வு காணப்பட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kottagiri Anna Nagar ,Kotagiri ,Anna Nagar ,Orazole ,
× RELATED விவாகரத்து வழக்கில் வழக்கறிஞர்...