×

வெளி மாநிலங்களுக்கு தேங்காய் அனுப்பி வைப்பு

நாமகிரிப்பேட்டை, பிப்.21: நாமகிரிப்பேட்டை வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர் வசதி மற்றும் இதமான சீதோஷ்ண நிலை காரணமாக, தேங்காய் சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் தேங்காய்கள் தடித்த ஓடு, அதிக பருமன், கூடுதல் எண்ணெய் சத்து மற்றும் நீண்டநாள் சேமிப்பு திறன் ஆகியவற்றால் தரமானதாக உள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மொத்தமாக லாரிகள் மூலம் தேங்காய்கள் அனுப்பப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக தேங்காய்க்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடைத்தரகர்கள் நேரடியாக தோட்டங்களுக்கு வந்து கொள்முதல் செய்வதால், போக்குவரத்து சிரமமும் குறைந்துள்ளது. மேலும், திருமண விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதால் தேங்காய் தேவை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தரமான விளைச்சலால் நாமகிரிப்பேட்டை தேங்காய் வெளி மாநில சந்தைகளில் தனி இடத்தை பிடித்துள்ளது.

Tags : Namakiripettai ,
× RELATED 80 கட்டு வைக்கோலுடன் தீப்பிடித்து எரிந்த லாரி