×

சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

ராசிபுரம், பிப்.19:ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இதில் காட்டூர் மற்றும் பட்டணம் பகுதிகளில் தார்சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போத, சாலையின் தடிமன் மற்றும் அகலம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிக்கோட்டப் பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவிப்பொறியாளர் மவுனிகாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Rasipuram ,Kattur ,Pattanam ,Salem Highway Department ,
× RELATED 80 கட்டு வைக்கோலுடன் தீப்பிடித்து எரிந்த லாரி