×

அரூரில் ரூ.6.20 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர், பிப்.18: அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் 180 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் குவிண்டால் ரூ.7,949 முதல் ரூ.8,217 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் ரூ.6.20 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags : Aroor ,Dharmapuri Agricultural Sales Committee ,Aroor Kachcherimedu ,Morappur ,Kambainallur ,Theerthamalai ,Kottapatti ,
× RELATED 80 கட்டு வைக்கோலுடன் தீப்பிடித்து எரிந்த லாரி