×

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

சேந்தமங்கலம், பிப்.20: சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி பேரூர், சேந்தமங்கலம் பேரூர் பகுதிகளைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தார். நகர திமுக செயலாளர் தனபாலன் வரவேற்றார். இதில், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜா கலந்துகொண்டு பேசுகையில், `வரும் 22ம் தேதி கோவை மாவட்டத்தில் மேற்கு மண்டல திமுக இளைஞரணி சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் சேந்தமங்கலம் ஒன்றியத்தில் இருந்து அதிகளவில் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். திராவிட மாடல் ஆட்சி அமைய திமுக இளைஞரணி நிர்வாகிகள் உழைக்க வேண்டும். வீடு, வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்,’ என்றார். கூட்டத்தில் காளப்பநாயக்கன்பட்டி பேரூர் திமுக செயலாளர் முருகேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள் கவின், ஷியாம் சுந்தர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Executives ,Senthamangalam ,Senthamangalam Union ,Kalapanayakkanpatti Perur ,Senthamangalam Perur ,Union ,Ashok Kumar ,District ,Viswanath ,
× RELATED 80 கட்டு வைக்கோலுடன் தீப்பிடித்து எரிந்த லாரி