- முதல்வர் மருது சகோதரர்கள்
- எம்.கே. ஸ்டாலின்
- ராகுல் காந்தி
- செல்வப்பெருந்தக
- சென்னை
- மாருது பிரதர்ஸ்
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழர்கள்
சென்னை: சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியதாவது; மருது சகோதரர்கள் போன்று இன்று நாடாளுமன்றத்திலே ராகுல் காந்தியும், தமிழ்நாட்டில் முதல்வரும், இந்த தேசத்தைப் பாதுகாப்பதற்கு எந்தவித சமரசமும் செய்யாமல் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
தமிழராக, தமிழ் மண்ணைக் காப்பதற்கு தமிழ்நாட்டு பெருமையைக் பாதுகாப்பதற்கு இன்னும் இன்னும் இந்திய தேசம் மட்டுமல்ல, உலக தேசமே தமிழ்நாட்டைப் பேசவேண்டும், பெருமைப்படவேண்டும் என்று முதல்வர் தொடர்ந்து உழைத்து தியாக தீபமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாரே அதைக்கண்டு உலகத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் இன்னும் பூரித்துக்கொண்டிருக்கிறார்.
எல்லோரும் 200 வெல்வோம் என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன் மிகப்பெரிய வரலாற்றைத் தமிழ்நாட்டில் முதல்வர் படைக்கப் போகிறார். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டார்கள். ஒருபக்கம் தமிழ்நாட்டை எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுக்க தயாராகி இருக்கின்ற ஒரு கூட்டம் வருகிறது.
அது முகமூடி அணிந்து வந்தாலும் சரி, எந்த உருவத்தில் வந்தாலும் சரி, அதை எதிர்கொள்கின்ற ஆளுமையும், திறமையும், நெஞ்சுறுதியும் முதல்வருக்கு இருக்கிறது. ஆகவே, எத்தனையோ குறுக்கு வழியில் என்னென்ன சோதனைகளை மேற்கொள்ளலாம், என்னென்ன இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் இன்று திகைத்துப்போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் மீது வைத்துள்ள பற்று, பாசம், உரிமை எல்லாவற்றையும் சேர்த்து வருகின்ற தேர்தலில் அது எதிரொலிக்கப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
