- அமுகா
- PAMAKA
- அன்புமணி
- Tamaga
- ஆதிமுகா
- பஜா
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- தமிழ் நகர்
- பாஜா தேசிய அமைப்பு
- சென்னை
- அட்டமுகு
- பஜாஜ்
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அதிமுக – பாஜ கூட்டணியில் அமமுக, பாமக அன்புமணி அணி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அதிமுகவும், பாஜவும் தொகுதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் சென்னை வந்த பாஜ தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், அதிமுகவிடம் எந்தனை தொகுதி கேட்டு பெற வேண்டும் என்று மாநில நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், 36 தொகுதிகளில் பாஜ போட்டியிடுவதற்கான தொகுதி பட்டியலையும் அதிமுக பொது செயலாளர் பழனிசாமியிடம் கொடுத்துள்ளது. இதனை வாங்கி பார்த்த அவரும், வழக்கம்போல் மறுத்து பேசாமல் அமைதியாக வாங்கி வைத்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விருப்ப தொகுதி பட்டியலில் புதுக்கோட்டை தொகுதியும் இடம் பெற்றுள்ளதாம். இந்த தகவல் விராலிமலை தொகுதி எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தெரிய வந்தது.
இந்த நிலையில், நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த விஜயபாஸ்கர், பொதுச்செயலாளர் எடப்பாடியை நேரில் சந்தித்து புதுக்கோட்டை தொகுதியை மட்டும் பாஜவிற்கு எக்காரணத்தை கொண்டு ஒதுக்ககூடாது, தனது ஆதரவாளருக்குதான் சீட் கொடுக்க வேண்டும் என்று கறாராக தெரிவித்துள்ளார். 2012ல் புதுக்கோட்டை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மன்னர் பரம்பரையை சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் வெற்றி பெற்றார்.
அதன் பிறகு 2 முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான் படுதோல்வியடைந்தார். இதில் அந்த 2 முறையும் திமுக அமோக வெற்றி பெற்றது. தற்போது கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்துள்ளார். கடந்த தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட்ட போது புதுக்கோட்டையில் டெபாசிட் இழந்தது. தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் 2026 தேர்தலில் எப்படியாவது புதுக்கோட்டையில் காலூன்ற பார்க்கிறது என புதுக்கோட்டை அதிமுகவுக்குள் பேசிக்கிட்டாங்களாம்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் புதுக்கோட்டை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுக்கோட்டை தொகுதியை அதிமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதில் ஒருவேளை புதுக்கோட்டை தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டால் அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறும் நிலை இருந்தால் விஜயபாஸ்கரை மதிக்கமாட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 முறை அமைச்சராக மன்னர் போல் இருந்து விட்டு பாஜ எம்எல்ஏ என்றால் எப்படி என்று விஜயபாஸ்கர் யோசிக்கிறாரு. புதுக்கோட்டை தொகுதியை பாஜவுக்கு ஒதுக்கும் பட்சத்தில் பாஜ மாவட்ட பொருளாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் இருவருக்குமே வாய்ப்பு இருக்க கூடும்.
இருவரும் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவரது சிபாரிசில் புதுக்கோட்டை தொகுதியில் நிற்பதற்காக காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால் இந்த இருவரும், விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது அவரிடம் கைகட்டி நின்றவர்கள். அதனால் இவர்களுக்கு எந்த வகையிலும் விஜயபாஸ்கர் உதவியாக இருக்க மாட்டார்’’ என்றனர்.
