×

ரூ.1.12 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், பிப்.18: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 3980 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ரூ.8349க்கும், மட்டரகம் குவிண்டால் ரூ.5405க்கும் ஏலம் போனது. ஆகமொத்தம் ரூ.1.12 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Tags : Namakkal ,Namakkal Agricultural Producers Cooperative Marketing Society ,Trichy ,Dindigul ,Erode ,Coimbatore ,
× RELATED தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு...