×

தமிழக தேர்தல் பணிக்கு கூடுதலாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள உத்தவு: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பணிக்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு கூடுதல் அதிகாரிகளை நியமனம் செய்வது குறித்து இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் கடந்த 9ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். எனவே தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுகின்றனர்.அதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சிவஞானம், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரி ஷ்ருதஞ்சய் நாராயணன், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Secretary ,Murukanantham ,Election Commission of India ,Chief Electoral Officer ,
× RELATED திருவண்ணாமலை: இடிபாடுகளில் சிக்கி...