- மெட்ராஸ் மாநிலம்
- முதல் அமைச்சர்
- சுப்பராயன்
- சென்னை
- தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை
- சென்னை
- மாநில முதலமைச்சர்
- டாக்டர்
- பி சுப்பராயன்
- நவானி தோட்டக்கர்பட்டி கிராமம்
- நாமக்கல் மாவட்டம்
சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில், நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் ரூ.2 கோடியே 66 லட்சம் செலவில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
