×

கொடநாடு வழக்கு: ஒருவருக்கு பிடிவாரன்ட்

ஊட்டி: ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொட நாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி காவலாளியை கொலை செய்து, முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்த வழக்கில் சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகினர்.

குற்றவாளிகள் தரப்பில் மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீஷன் மற்றும் தீபு ஆகியோர் ஆஜராகினர். விசாரணைக்கு ஆஜராகாத வாளையார் மனோஜிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நீதிபதி சந்திரசேகரன் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, விசாரணையை வரும் மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags : Kodanad ,Sayan ,Jayalalithaa ,Sasikala ,
× RELATED தமிழக தேர்தல் பணிக்கு கூடுதலாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்