×

சொல்வது எதையும் செய்யாத டுபாக்கூர் பிரதமர் மோடி: கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் எடப்பாடி; வச்சு செஞ்ச லியோனி

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடைபெற்றது. இதில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக எடப்பாடி பழனிசாமி இருவரும் அமைத்திருக்கின்ற கூட்டணிக்கு பெயர் என்டிஏ. நேஷனல் டேமாக்ரடிக் அலயன்ஸ். நான் வைத்திருக்கும் பெயர் ‘நேஷனல் டிசாஸ்டர் அலயன்ஸ்’. தேசத்தை அழிக்க வந்த கூட்டணி. எப்டிஏ என இன்னொரு பெயரும் வைத்திருக்கின்றேன். அதாவது ப்ராடு, டுபாக்கூர், ஆக்டிங். பிரதமர் மோடி ஒரு பொய் புரட்டுக்காரர். சொல்வது எதையும் செய்யாத டுபாக்கூர். பிரதமர் குனிந்து ஒரு கும்பிடு போடுவார். அந்த கூழக்கும்பிடில் யாரை கவிழ்க்க போகிறார் என்பதே தெரியாது. கூழை கும்பிடு போட்டு மக்களை ஏமாற்றுபவர் தான் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி. இவ்வாறு அவர் பேசினார்.

திண்டுக்கல் ஐ.லியோனி அளித்த பேட்டியில் மாதம் ரூ1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று திமுக சொன்னபோது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று சொன்ன எடப்பாடி , தற்போது ஆண்களுக்கும் இலவச பயணம், மகளிர் உரிமை தொகை ரூ.2,000 கொடுப்போம் என்று கூறியுள்ளார். இதெல்லாம் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்க்கப்போறேன் என்பது போல் மக்களை ஏமாற்றும் செயல். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி உள்ளது அதிமுக நிலை’ என்றார்.

Tags : Modi ,Edappadi ,Leoni ,Perambalur ,Tamil Nadu ,DMK ,Dindigul I. Leoni ,Narendra Modi ,AIADMK ,Edappadi Palaniswami ,NDA.… ,
× RELATED உங்க கட்சிகாரங்க மற்ற பெண்களை பற்றி...