×

மனைவி, குழந்தைகளை நடுத்தெருவில் விட்டவர் விஜய்; பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச என்ன தகுதி இருக்கு? அமைச்சர் கீதாஜீவன் பதிலடி

தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இதில், அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது: ஓராண்டுக்கு முன் கட்சியை ஆரம்பித்த விஜய்யின் கரூர் கூட்டத்தில் 41 பேர் இறந்தனர். அவர்களது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறாமல் பனையூர் பங்களாவிற்கு அழைத்து ஆறுதல் கூறி புதிய கலாசாரத்தை உருவாக்கியுள்ளார்.

மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு கட்சியை நடத்தும் விஜய், தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் நலன், பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. பாஜ பெயரையே சொல்ல பயப்படும் விஜய், ஒருநாள்கூட பாஜவை விமர்சித்ததில்லை. இவரெல்லாம் ஜனநாயகத்தை காப்பாற்ற போகிறேன் என்று பேசுவது கேலி கூத்தாக இருக்கிறது. அவருக்கு மக்கள் தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்.

மக்களை பற்றி சிந்தித்து மக்களோடு பணியாற்றுவதுதான் திமுக. கொரோனா பெருந்தொற்று, மழை வெள்ள காலத்தில் திமுக, தோழமை கட்சியினருடன் தன்னலம் கருதாமல் பணியாற்றியுள்ளது. உங்களுக்காக உழைக்கின்ற திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். நிச்சயமாக மீண்டும் 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார். நீங்கள் அனைவரும் மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vijay ,Minister ,Geethajeevan ,Secular Progressive Alliance ,Bhopal Rayapuram, Thoothukudi ,Karur ,Panayur ,
× RELATED புதுச்சேரியில் ஆட்சியை தீர்மானிக்கும் சுயேச்சைகள்