- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக மருத்துவ குழு
- எசிலன்
- சென்னை
- என் எஜிலன்
- சட்டமன்ற உறுப்பினர்
- அண்ணா அரியலையா
- அஇஅதிமுக
சென்னை: திமுக மருத்துவ அணிச் செயலாளர் நா.எழிலன் எம்எல்ஏ சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியின் குறைகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. கடந்த ஆட்சியிலேயே அவர்கள் டபுள் இன்ஜினாகத்தான் இருந்தார்கள், ஆனால் டபுள் இன்ஜின், ட்ரிப்பிள் இன்ஜின் கதையெல்லாம் இங்கு எடுபடவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட இன்ஜின்தான். 2021ல் திமுக வெற்றி பெற்ற பிறகு, மகளிர் உரிமை தொகை திட்டத்தைச் செயல்படுத்தவே முடியாது என்று எடப்பாடி கூறினார். ஆனால், சவால்களை முறியடித்து முதல்வர் சுமார் 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் உரிமை தொகையை வழங்கி வருகிறார்.
இதுமட்டுமின்றி, பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் மற்றும் கோடைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5,000 ரூபாய் என தொடர்ச்சியாக மக்கள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் சர்வதேசப் போர் சூழலால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை எதிர்கொள்ள, இந்த நிதியுதவிகள் மக்களுக்குப் பெரும் பக்கபலமாக இருக்கின்றன. ஒரு தீர்க்கதரிசியாகச் செயல்பட்டு வரும் முதல்வரின் இத்தகைய திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்களுக்காக எப்பொழுதும் பயணிக்கிற அரசு திராவிட மாடல் அரசு.
திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் ஆவணம் மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் சமூக-பொருளாதாரச் சூழலையே மாற்றியமைக்கும் சக்தி கொண்டது. எனவே, அதன் மீதான மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த அறிக்கை எங்களின் வெற்றி வாய்ப்பை பல மடங்கு அதிகரிக்க முக்கிய அடித்தளமாக அமையும். அனைத்துத் தரப்பு மக்களையும் 360 கோணத்தில் திருப்திப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை அமையும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை வெளியிடும்போது, அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியை தருவதோடு, எங்களுக்குத் தேர்தலில் மிகப்பெரிய உந்துசக்தியாகவும் இருக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்துள்ள அசாத்தியமான நம்பிக்கையும், இந்த தேர்தல் அறிக்கையின் நம்பகத்தன்மையும் வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும். இவ்வாறு அவர் கூறினார்.
