அம்பை,பிப்.10: அம்பை ராமலிங்கர் தெருவை சேர்ந்த முருகன் மகன் கண்ணன் (40). கல் உடைக்கும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மன உளைச்சல் காரணமாக அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அம்பை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிந்து கண்ணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
