×

நெமிலியில் கடும் பனியால் வாகன ஓட்டிகள் அவதி

நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் ஓரளவு கைகொடுத்தது. ஆனாலும், ஏரிகள் பெரும்பாலும் நிரம்பியது.

பருவமழை காலம் முடிந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக கடும் பனியும், குளிரும் நீடிக்கிறது.இந்நிலையில் நெமிலியில் கடந்த சில நாட்களாக வழக்கத்தைவிட கடுமையான பனியும், குளிரும் காணப்படுகிறது.

அதன்படி, நேற்று காலை 8 மணி வரை நீடித்த பனியால் சாலையில் மேகம் சூழ்ந்து, மலைப்பிரதேசம் போல காட்சியளித்தது. அதனால், வாகன ஓட்டிகள் அவதிபட்டனர்.

வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றபோதும், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவில், பனிப்பொழிவு காணப்பட்டது. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை 8 மணி வரை பனி சூழ்ந்த நிலை காணப்பட்டது.

Tags : Nemili ,Ranipet district ,
× RELATED TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம்!