×

தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவாதம் கொடுத்தால் அதனை காப்பாற்றும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

 

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை டாடா மோட்டார்ஸ் அமைத்துள்ளது. 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அமைந்துள்ளது. பனப்பாக்கம் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, காரை ஓட்டி பார்த்தார். பின்னர், திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்; ராணிப்பேட்டையில் டாடா தொழிற்சாலை தொடங்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு பொன்னாள். டாடா மோட்டார்ஸ் குழும தலைவராக சந்திரசேகரன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

இந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். உலக புகழ்பெற்ற நிறுவனமான டாடா குழும தலைவராக சந்திரசேகரன் இருப்பது தமிழ்நாட்டுக்கு பெருமை. ஸ்டீல், ஆட்டோ மொபைல், தொலைத்தொடர்பு என பல துறைகளில் தடம்பதித்து மிகப் பெரிய சாதனை படைத்த நிறுவனம். டாடா என்று சொன்னாலே அதற்கு ஒரு பிராண்ட் வேல்யூ உள்ளது. டாடா நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவு உள்ளது. இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடுதான். டாடா நிறுவனம் தமிழ்நாடு மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு மீது டாடா நிறுவனம் நம்பிக்கை வைத்துள்ளதற்கு டிசிஎஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் அடையாளம். டாடா ஜேஎல்ஆர் தொழிற்சாலை இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்த மாநிலம் தமிழ்நாடு.

உலக தரம் வாய்ந்த கார்கள் உற்பத்தியில் எந்த நாட்டுடனும் போட்டி போடும் திறன் கொண்டது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் திறனுக்கு அடையாளம்தான் ராணிப்பேட்டையில் டாடா தொடங்கியுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலை. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்த மாநிலம் தமிழ்நாடு. புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடாக மாற்ற வேண்டும், முதலீடுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 2024 மார்ச் மாதம் டாடா ஜேஎல்ஆர் நிறுவனத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 18 மாதம் திட்டமிடப்பட்ட நிலையில் 16 மாதங்களிலேயே தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகி சில மாதங்களில் 1,207 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 18 மாதங்களில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டபோதிலும் பதினாறே மாதங்களில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது இதுவே திமுக அரசின்.

தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு என்பதற்கு Jaguar Land Rover ஆலை தொடங்கப்பட்டதே சான்று. முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். முதலீடுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் மாநாடு விரைவில் நடத்தப்படும். இந்த விழாவில் ரத்தன் டாடா அவர்களை நினைவுகூர்கிறேன். தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவாதம் கொடுத்தால் அதனை காப்பாற்றும். டாடா குழுமம் தமிழ்நாட்டில் எந்த துறையில் முதலீடு செய்தாலும் அதற்கு முழு ஆதரவு அளிப்போம். முதலீட்டுக்கு யார் வந்தாலும் திராவிட மாடல் அரசு திறந்த மனதோடு, கரங்களோடு வரவேற்கும். புதிய தொழிற்சாலைகள், ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க டாடா குழும தலைவருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags : Tamil Nadu government ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Tata Motors ,Banpakak, Ranipettai District ,Panapakkam Shipkot Industry Punga ,BANAPAKAM ,PLANT ,
× RELATED தூய்மைப் பணியாளர்கள் உணவுத் திட்ட...