சென்னை: TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்மை தேர்வு 8ம் தேதி நேற்று (08.02.2026) நடைபெற இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டது. அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கான பதிவெண் இல்லை என்று கூறப்படுகிறது. பதிவெண் இல்லாததால், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.
அப்போது உங்களது பதிவெண் நந்தனம் மையத்தில் இருக்கும் என்றும் அங்கு சென்று தேர்வு எழுதுமாறும், தேர்வு மைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இனி நந்தனம் சென்றால் நேரம் ஆகும் என்றும், தங்களால் தேர்வை சரியாக எழுத முடியாது என்றும் தெரிவித்து தேர்வர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்புடம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் மட்டும் நேற்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. நரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, குரூப் 2 முதன்மைத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக TNPSC விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது; சென்னையில் இன்று 08.02.2026 நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (மற்றும்) IIA பணிகள் பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் (ம) பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாரறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும். இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail மூலம் தகவல் அளிக்கப்படும்.
எதிர்வரும் 22022026 முப நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II பணிகள்) பொது அறிவு தேர்வு (தாள்-II) (Descriptive Type) அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மீண்டும் 13.022026 அன்று வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல். நேற்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
