மதுரை :13 தென் மாவட்டங்களில் அனுமதி பெறாமல் வைத்துள்ள அரசியல், சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றக் கோரிய வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் முறையான அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

