- நாகை
- விஜய்
- நாகப்பட்டினம் மாவட்டம்
- நாகப்பட்டினம்
- கீழ்வேளூர்
- வேதாரண்யம்
- மயிலாடுதுறை
- சீர்காழி
- பூம்புகார்
- மயிலாதுதுரை மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பிரித்த பின்னர் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் என 3 தொகுதிகள் மட்டும் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நாகப்பட்டினம் தொகுதி வளர்ச்சியில் பின்னோக்கி சென்று விட்டது. அதே போல் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் நாகப்பட்டினம் தொகுதியை சேர்ந்தவர்களாக இருப்பது இல்லை.
எனவே, நாகப்பட்டினம் தொகுதியை விஐபி தொகுதியாக மாற்ற வேண்டும். அதே நேரத்தில் அனைவரின் கவனம் நாகப்பட்டினத்தை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காக தவெக தலைவர் விஜய்யை நாகப்பட்டினம் தொகுதியில் நிற்க வைக்க விஜய் நற்பணி மன்றத்தினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கடந்த 2010ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் ஆற்காட்டுத்துறை மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்தி படுகொலை செய்த போது மீனவர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் வகையில் நாகப்பட்டினத்திற்கு விஜய் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பிரசாரம் செய்தார். நடிகராக அனைவரின் கண்களுக்கு தெரிந்த விஜய்யை முதன் முதலாக மேடை ஏற்றியது நாகப்பட்டினம் தொகுதி மக்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை நாகப்பட்டினம் தொகுதியில் களம் இறக்க விஜய் நற்பணி மன்றத்தினர் முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.
