- STBI
- சென்னை
- மாநில தலைவர்
- எஸ்.டி.பி.ஐ கட்சி
- நெல்லா முபாரக்
- பொது நல திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் காக்கும் உன்னத நோக்கத்துடன், மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (ஹெச்பிவி) தடுப்பூசி வழங்கும் முன்னோடித் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்த புரட்சிகரமான தடுப்பூசித் திட்டத்தை தொடங்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வரவேற்று பாராட்டுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு சில நிமிடங்களிலும் ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவது என்பது கொடூரமான உண்மை.
இலவச தடுப்பூசி திட்டம் வெறும் சுகாதாரத் திட்டமாக மட்டுமின்றி, பெண்களின் வாழ்வைப் பாதுகாக்கும் மாபெரும் சமூகப் புரட்சியாகவே விளங்குகிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும், பெண்களின் உயிர் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் எந்த முயற்சியும் பாராட்டுக்குரியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி சார்பாக தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, தகுதியுடைய அனைத்து பெண் குழந்தைகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
