- நச்சுனு
- தெற்கு
- தமிழ்
- என்டிஏ
- ஆடமுக
- முருகவேல் ராஜன்
- தெற்கு மாவட்டம்
- திமுகா கூட்டணி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- கே. ஸ்டாலின்
1. இந்த தேர்தலில் தென்மாவட்ட மக்களின் மனநிலை என்ன? திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளீர்கள்? இன்றைக்கு தமிழ்நாட்டை இந்தியாவின் ஆகச்சிறந்த மாநிலமாக, தொழில்துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் உயர்த்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளார். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வேலைவாய்ப்பு தேடி, குறிப்பாக குஜராத் மாடல் என்று சொல்லக்கூடிய மோடியினுடைய பாஜ ஆட்சி நடக்கும் மாநிலங்களில் இருந்து கூட, பெருவாரியான இளைஞர்கள் வேலை தேடி தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள்.
தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவிலே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம். இன்றைக்கு எங்கே பார்த்தாலும் பாலங்கள், சாலைகள், விரிவாக்கப் பணிகள் என்று மாநிலமே ஒரு புத்துணர்ச்சியோடு, ஒரு புது வளர்ச்சி, உள்கட்டமைப்பில் மிகப்பெரும் மாற்றங்கள் நடந்திருப்பதை இந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாடு பார்க்கிறது. எப்பொழுதும் இனக்கலவரம், சாதிக்கலவரங்களுக்கே இலக்காகக்கூடிய பகுதியாக இருந்த தென் தமிழ்நாடு, இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, சிறுபான்மையின மக்களுக்கிடையே ஒரு சமூக நல்லிணக்க சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
தென் தமிழ்நாடு மிகவும் அமைதியான ஒரு பகுதியாக இன்றைக்கு இருக்கிறது. தென் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் எந்த ஒரு தொகுதியைக் கொடுத்தாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பாகத் தேர்தல் களத்திலே பணியாற்றி வெற்றி பெறுவோம்.
2. பாமக இரண்டாக உடைந்து உள்ள நிலையில் தென்மாவட்ட பாமக வாக்குகள் யார் பக்கம் செல்லும்? ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்து உள்ளதாலும், தேமுதிக கூட்டணியில் இணைந்து உள்ளதாலும் தென் மாவட்டத்தில் வலுவான சக்தியுடன் திமுக களமிறங்குகிறதா? ஒன்றுபட்ட பாமகவாக இருக்கிறபோதே, தென் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு என்று ஒரு பெரிய வாக்கு வங்கி என்பது இல்லை.
இப்போது இரண்டாக உடைந்திருக்கிற இந்தச் சூழ்நிலையில், பாமக எந்தவித ஒரு பெரிய விளைவையும் தேர்தல் களத்திலே, தென் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படுத்த முடியாது. அதனால் பாமக கட்சியால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தென் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பூஜ்ஜியம். தேமுதிகவுக்கு நிச்சயமாக ஒரு கணிசமான வாக்கு வங்கி என்பது தென்தமிழகத்திலே இருக்கிறது. அதை போலவே ஓபிஎஸ்சை தென்தமிழ்நாட்டினுடைய ஒரு அடையாளமாகத்தான் தென்தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்சை வெளியேற்றியதால் தென்தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியிலே ஒரு தீராத கோபம் இருக்கிறது. 10.5% இடஒதுக்கீடு தந்து தென் தமிழகத்துக்கு எடப்பாடி துரோகம் செய்து விட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையிலே ஓபிஎஸ் திமுகவிலே இணைந்திருப்பது என்பது திமுகவின் வாக்கு வங்கியை மேலும் உயர்த்தி இருக்கிறது.
3. நடிகர் விஜய் கட்சி தொடங்கி தென் மாவட்டமான மதுரையில் மட்டுமே மாநாடு நடத்தி உள்ளார். மற்ற இடங்களில் எட்டி கூட பார்க்கவில்லை. தென்மாவட்டங்களில் விஜய்க்கு ஆதரவு இல்லையா? விஜய்க்கு தமிழ்நாடு முழுவதும் ஆதரவில்லை என்பதுதான் உண்மை. அவரிடம் அவரை பின்தொடர்பவர்கள் அவருடைய ரசிகர்களாக, அவர் மீது ஒரு சினிமா மோகம் கவர்ச்சி கொண்டவர்களாக இருக்கிறார்களே தவிர, எந்த அளவும் அரசியல் தெளிவும், அரசியல் புரிதலும் இல்லாத ஒரு கூட்டமாகத்தான் இருக்கிறார்கள்.
பொதுவெளியிலே வருவதில்லை, அரசியல் செய்யவில்லை, நாட்டு மக்களுக்கு எதற்காக கட்சி உருவாக்கிருக்கிறார்? என்ன காரணத்துக்காக அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை இதுவரைக்கும் விளக்கவில்லை. மேற்கொண்டு இப்பொழுது அவருடைய துணைவியார் நீதிமன்றத்திலே அவருக்கு எதிராக விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளார். விஜய்யை யாரும் ஒரு அரசியல் சக்தியாக பார்க்கவில்லை. ஆகவே தென்தமிழ்நாட்டு மக்கள் விஜய்யை ஒருபோதும் துளியளவும் ஏற்றுக் கொள்கிற நிலையிலே இல்லை என்பதுதான் உண்மை.
4. தென்மாவட்ட சமூக மக்களை அதிமுக புறக்கணித்ததால், அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். இந்த தேர்தலில் தென்மாவட்டத்தில் அதிமுக வெல்லுமா? பாஜ, அதிமுகவை தன்னுடைய ஒரு கிளைக்கட்சியை போல், கிளைக்கழகத்தை போல் அடிமைப்படுத்தி இருக்கிறது. தென்தமிழ்நாட்டு மக்கள் அதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
மத்தியிலே இருக்கக்கூடிய பாஜ – மோடி, அமித்ஷா போன்ற ஆட்கள், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகள் எடப்பாடியை மிரட்டி உருட்டி கையிலே வைத்துக்கொண்டு, எப்படியாவது தமிழ்நாட்டுக்குள்ளே கால் ஊன்றி விட்டு அதிமுகவை முற்றிலுமாக அழித்து அந்த இடத்தில் பாஜவை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரு அடிப்படையிலே செயல்படுகிறார்கள். இன்றைக்கு கூட்டணி சீட்டுகளை முடிவு செய்வதற்கு இங்கிருந்து எடப்பாடியை டெல்லிக்கு வரவழைத்து பேசப்படுகிறது.
இத்தனை இடங்களை கொடு என்று அவரை கட்டாயப்படுத்தி வாங்கி கொள்கிறார்கள் என்பதே அதிமுக அடகு போய்விட்டது என்றுதான் அர்த்தம். சொந்த காலிலே நிற்கவில்லை. வாடகை காலிலே நிற்கிறது. அதிமுகவிற்கு என்று தனி பலம் என்பது இல்லை. ஏற்கனவே தென்தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து சமூக மக்களும் எடப்பாடியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டார்கள். மிக மிக மோசமான படுதோல்வியை என்.டி.ஏ கூட்டணி சந்திக்கும். தென்தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் அதிமுக கூட்டணி டெபாசிட்டை இழக்கும்.
