விக்கிரவாண்டி, ஜன. 28: விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40), கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் எழிலரசன் மகன் சஞ்சய் (23) என்பவர் சுந்தரமூர்த்தியிடம் சிகரெட் கேட்டுள்ளார். இதற்கு அவர் வயது வித்தியாசமின்றி என்னிடம் சிகரெட் கேட்கிறாயே என கேட்டதற்கு ஆத்திரமடைந்த சஞ்சய் சுந்தரமூர்த்தியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முன்னாள் கொலை வழக்கு குற்றவாளியான சஞ்சய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
