×

கடலூர் அருகே விஷம் குடித்து எலக்ட்ரீஷியன் சாவு

ரெட்டிச்சாவடி, ஜன. 23: கடலூர் சுபஉப்பலவாடி மாரியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ்குமார்(30), எலக்ட்ரீஷியன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜேஷ்குமார் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து வைக்குமாறும் வீட்டில் கூறியுள்ளார். அதற்கு குடும்பத்தினர் சிறிது நாட்கள் ஆகட்டும், அந்தப் பெண் வீட்டில் பேசி திருமணம் செய்து வைப்பதாக கூறி உள்ளனர். நீங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து விடுவேன் என ராஜேஷ்குமார் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜேஷ்குமார் கடந்த 28ம் தேதி உச்சிமேடு கோழி பண்ணையில் இருந்த பூச்சி மருந்து குடித்துள்ளார். இதை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore ,Reddychavadi ,Rajesh Kumar ,Mariamman Temple ,Subauppalavadi, Cuddalore ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு