×

விக்கிரவாண்டி அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு

விக்கிரவாண்டி, ஜன. 23: விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி வட்டம் செ.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன்(40), விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிக்கொண்டு நிலத்திற்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ஒன்றரை சவரன் நகை மற்றும் 200 கிராம் வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பெரியதச்சூர் போலீசில் சிவராமன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Wickravandi ,Wikivrandi ,Circle ,Sect ,SHIVARAMAN ,PUDUR VILLAGE ,
× RELATED கடலூர் மேற்கு மாவட்ட காங். தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு