×

சூதாடிய 5 பேர் கைது

விக்கிரவாண்டி, ஜன. 28: விக்கிரவாண்டி அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி அருகே கெடார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் செல்லங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காசு வைத்து சூதாடிய செல்லங்குப்பத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (32), சுந்தரமூர்த்தி (35), ஆறுமுகம் (42), சுரேஷ் (39), ராமதாஸ் (35) ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 2 பைக்குளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vikravandi ,Kedar ,Police Inspector ,Gomathi ,Chellankuppam ,Vikravandi.… ,
× RELATED தொழிலாளியை தாக்கிய முன்னாள் குற்றவாளி கைது