- அரசு பெண்கள் பள்ளி
- கட்தூர்
- காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- தமிழ் அபிவிருத்தி திணைக்களம்
- அழகம்மாள்
- அனுராதா
- கீதா…
கடத்தூர், ஜன. 22: கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறை திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்பில், திருக்குறள் பயிற்சி வகுப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அழகம்மாள் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் அனுராதா, கீதா முன்னிலை வகித்தனர். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களின் பொறுப்பாளர் பாவலர் மலர்வண்ணன் நோக்கவுரை ஆற்றினார். உலக பொதுமறைத் தமிழ் சங்கம் செயலாளர் கீரை.பிரபாகரன், நூலகர் சரவணன் ஆகியோர் மாணவிகளுக்கு திருக்குறள் பயிற்சி வகுப்பு எடுத்தனர். திருக்குறள் போட்டிகளில், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக முதுநிலை அறிவியல் ஆசிரியர் சரவணன் வரவேற்றார். ஆசிரியை கோகிலா நன்றி கூறினார். முதுகலை தமிழாசிரியர் சுமித்ரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியைகள் சரண்யா, ஜெயப்பிரதா, அம்சவேணி, பயிற்சி ஆசிரியைகள் நர்மதா, காவியா மற்றும் மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

