பந்தலூர், ஜன.23: பந்தலூர் அருகே பொன்னானியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து திரிசூலம் வைத்ததை வருவாய் துறையினர் அகற்றினர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பொன்னானியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் திரிசூலம் வைத்துள்ளனர். அரசு நிலத்தில் வைக்கப்பட்ட திரிசூலத்தை அகற்ற கூடலூர் ஆர்டிஓ குணசேகரன் வருவாய்துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, பந்தலூர் தனி வட்டாட்சியர் செந்தில்குமார், தலைமையில் துணை வட்டாட்சியர் பொன்னரசு, வருவாய் ஆய்வாளர் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, வருவாய்துறையினர் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்று திரிசூலத்தை போலீசார் பாதுகாப்புடன்அகற்றினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
