×

ஆர்எஸ்ஆர் சர்வதேச பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகாசி, ஜன. 21: சிவகாசி ஆர்எஸ்ஆர் சர்வதேச பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைவர் சண்முகையா தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் முத்துலட்சுமி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார போக்குவரத்து அலுவலர் வேலுமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாஸ்மின் கலந்து கொண்டு பேசும்போது, சாலைகளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்துவதன் பாதிப்புகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம், இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தினர். மேலும், பெற்றோருக்கும் தலைக்கவசம் அணிய அறிவுறுத்துமாறு வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : RSR ,International ,School ,Sivakasi ,RSR International School ,Principal ,Shanmugaiah ,Mahendran ,Muthulakshmi ,
× RELATED உருளைக்கிழங்கு திருடியவர் கைது சிஐடியு, ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்