×

சென்னை காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்: கமிஷனர் அருண் கலந்து கொண்டு சிறப்பிப்பு

 

சென்னை: சென்னை காவல் ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவுகள் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கமிஷனர் அருண் காவலர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டாடினார்.
சென்னை காவல்துறை சார்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித தோமையர்மலை ஆயுதப்படை வளாகத்தில், சென்னை காவல், ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவுகள் சார்பில் நடைபெற்ற காவல் துறையினருக்கான சமத்துவ பொங்கல் விழாவில் சென்னை காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டு, விழாவினை துவக்கி வைத்து, பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார். மேலும், பொங்கல் விழாவையொட்டி, காவல் குடும்பத்தினர் வரைந்திருந்த கோலப்போட்டிக்கான கோலங்களை பார்வையிட்டு, கிராமிய பண்பாட்டினை பரைசாற்றும் விதமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த வயல்வெளி, நாற்று நடுதல், நெற்களஞ்சியம் உள்ளிட்ட கிராம கலைகளை பார்வையிட்டும், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினருக்கான கயிறு இழுத்தல், உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

மேலும், காவல் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் பரத நாட்டியம், கிராமிய, பொங்கல் நடனங்கள் மற்றும் சிலம்பாட்டம், மல்லர் கம்பம் ஆகிய சாகசங்களை காவல் குடும்பத்தினருடன் கண்டு ரசித்து பாராட்டினார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினருக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றி, அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) ஜோஷி நிர்மல் குமார், இணை ஆணையாளர் (தலைமையிடம்) மகேஷ்வரன், துணை ஆணையாளர்கள் N.நாதா, (சைபர் கிரைம்), ராமமூர்த்தி (நுண்ணறிவுப்பிரிவு), சீனிவாசன் (புனித தோமையர்மலை), ஜெயகரன் (மோட்டார் வாகனப்பிரிவு), அன்வர் பாஷா (ஆயுதப்படைII), காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

 

Tags : Chennai Police ,Samathuva Pongal festival ,Commissioner ,Arun ,Chennai ,Chennai Police Armed Forces ,Central Crime Branch ,Units ,Samathuva Pongal ,Chennai.… ,
× RELATED ஜவுளி நிறுவனங்கள் பின்னலாடை...