- முதல் அமைச்சர்
- Jawahirullah
- சென்னை
- மனிதனாய மக்கள்
- காட்ச்சி
- எம் எச் ஜவஹிருல்லா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- முஸ்லீம் லீக்
- உலமா
- தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்களுக்கு ஓய்வூதியம் 5000 ரூபாயாகவும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உலமாக்கள் இரு சக்கரம் வாங்குவதற்கு மானியத் தொகை 25000 லிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கி இருப்பதும் சிறப்புக்குரியது.
சென்னை மற்றும் மதுரையில் செயல்பட்டு வரும் வக்பு வாரிய தீர்ப்பாயம் போன்று கோவையிலும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்தாய்ப்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கும் முதல்வருக்கு மமக சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
