சென்னை: நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்படவில்லை என தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. “பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யமாட்டோம்.” என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறாகப் பகிரப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. என விளக்கம் அளித்தது.
