- சென்
- மலேசியா ஓபன்
- கோலா லம்பூர்
- லக்ஷ்யா சென்
- ஜேசன் தே ஜியா ஹெங்
- மலேசியா ஓப்பன் பேட்மிண்டன்
- மலேசியாவின் கோலாலம்பூர்...
கோலாலம்பூர்: மலேசியா ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் லக்சயா சென், சிங்கப்பூர் வீரர் ஜேசன் தே ஜியா ஹெங்கை வீழ்த்தினார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் – சிங்கப்பூரின் ஜேசன் தே ஜியா ஹெங் மோதினர். முதல் செட்டில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சென், 21-16 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2வது செட், 21-15 என்ற புள்ளிக் கணக்கில் ஹெங் வசம் சென்றது. வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய சென், 21-14 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.
அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோட், தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இந்தனோன் மோதினர். துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடிய ரட்சனோக், 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
