×

‘பிட்காயின்’ மோசடி வழக்கில் திருப்பம்; நடிகை ஷில்பாவின் கணவருக்கு சம்மன்: மும்பை நீதிமன்றம் உத்தரவு

 

மும்பை: ‘கெயின் பிட்காயின்’ என்ற பெயரில் போன்சி மோசடித் திட்டத்தை நடத்திய மும்பையை சேர்ந்த அமித் பரத்வாஜ் என்பவரிடமிருந்து, உக்ரைனில் பிட்காயின் பண்ணை அமைப்பதாகக் கூறி பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான தொழிலதிபர் ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களைப் பெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில், அந்த பிட்காயின்களின் தற்போதைய மதிப்பு சுமார் 150 கோடி ரூபாயாகும். இது தொடர்பாக ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்குச் சொந்தமான ஜூகு பகுதியில் உள்ள 5 வீடுகள் மற்றும் புனேவில் உள்ள பங்களா என மொத்தம் 98 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது.

ராஜ் குந்த்ரா வெறும் இடைத்தரகராக மட்டுமே செயல்பட்டதாகக் கூறினாலும், அவருக்கும் அமித் பரத்வாஜின் தந்தைக்கும் இடையே நேரடி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், மும்பை சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்ட ராஜ் குந்த்ரா மற்றும் மற்றொரு ராஜேஷ் சதிஜா ஆகியோர் வரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Mumbai ,Shilpa ,Raj Kundra ,Bollywood ,Shilpa Shetty ,Amit Bhardwaj ,Ukraine ,
× RELATED ஒரே நாளில் பெரும் பாதிப்பு பங்குச்...