தண்டராம்பட்டு, டிச.24: தரடாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணக்கந்தல், இந்திரா நகர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டு மனை பட்டா கேட்டு தாசில்தரிடம் மனு அளித்தனர். தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணக்கந்தல், இந்திரா நகர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அவ்வாறு வசிக்கும் அவர்கள் அந்த இடத்திற்கு வீட்டு மனை பட்டா கேட்டு நேற்று தண்டராம்பட்டு தாசில்தார் துரைராஜிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு வந்து ஆய்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
