×

12 பந்துகளில் 50 அபிஷேக் சாதனை

 

ஐதராபாத்: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் நேற்று, பெங்கால்-பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்காக ஆடிய கேப்டன் அபிஷேக் சர்மா, 12 பந்துகளில் அரை சதம் விளாசி, 3வது அதிவிரைவு டி20 அரை சத சாதனையை அரங்கேற்றி உள்ளார். இந்த சாதனையை, இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில், ஜஸாய், சாஹில் சவுகான் ஆகியோருடன் அபிஷேக் சர்மா பகிர்ந்து கொள்கிறார். நேற்றைய போட்டியில் அவர் 52 பந்துகளில் 16 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 148 ரன் விளாசினார். இதன் மூலம் டி20யில் ஒரு போட்டியில் 3வது அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஜஸாய், நியூசிலாந்தின் ஃபின் ஆலனுடன் அபிஷேக் இணைந்துள்ளார்.

 

Tags : Abhishek ,Hyderabad ,Bengal ,Punjab ,Syed Mushtaq Ali Trophy T20 match ,Abhishek Sharma ,T20 ,
× RELATED ACC தலைவர் நக்வியை மீண்டும் புறக்கணித்த...