ராவல்பிண்டி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் இடையே முத்தரப்பு டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த 6வது மற்றும் கடைசி போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் குவித்தது. கமில் மிஷாரா 48 பந்தில் 76, குசால் மெண்டிஸ் 40 ரன் விளாசினர். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் சாஹிப்சாதா ஃபர்ஹான் 9, சைம் அயூப் 27 ரன் அடிக்க, பாபர் அசாம் டக்அவுட் ஆனார்.
கேப்டன் சல்மான் ஆகா நாட் அவுட்டாக 63, உஸ்மான் கான் 33, முகமது நவாஸ் 27 ரன் அடித்தனர். 20 ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களே எடுத்தது. இதனால் 6 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. 4 ஓவரில் 20 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்த இலங்கையின் துஷ்மந்த சமீரா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் இலங்கை பைனலுக்கு தகுதி பெற்றது. நாளை பைனலில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. 4 போட்டியில் ஒருவெற்றி, 3 தோல்வியுடன் கடைசி இடம்பிடித்த ஜிம்பாப்வே வெளியேறியது.
