துபாய்: ஜூனியர் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் செமி பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் நேற்று மோதின. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்ைக அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக சமீகா 42, தின்சரா 32 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஹெனில் பட்டேல், சவுகான் தலா 2 விக்கெட், குமார் சிங், தேவேந்திரன், கிலான் பட்டேல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர்கள் ஆயுஷ் மாத்ரே 7 ரன், வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். அடுத்து இறங்கிய ஆரோன் ஜார்ஜ் 58 ரன், மல்ஹோத்ரா 61 ரன் எடுக்க இந்திய அணி 18 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு செமி பைனிலில் வங்க தேச அணியை 121- 10 (26.3 ஓவர்), பாகிஸ்தான் அணி 122-2 (16.3 ஓவர்) 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான இறுதி போட்டி துபாயில் நாளை இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
