- 5 வது டி 20 ஐ
- தென் ஆப்பிரிக்கா
- இந்தியா
- அகமதாபாத்
- டி 20 ஐயில்
- சஞ்சு சாம்சன்
- இந்தியன்
- அபிஷேக் சர்மா
- தென்னாப்பிரிக்கா...
அகமதாபாத்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையிலான 5வது டி20 போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் ஓபனராக களம் கண்ட சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா தென் ஆப்ரிக்கா வேகங்களை சிதறடித்து ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 63 ரன்னாக இருந்த போது அபிஷேக் சர்மா 34 ரன்னில் அவுட் ஆக சஞ்சு சாம்சனும் 37 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும் 5 ரன்னில் அவுட் ஆக திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர்.
தென் ஆப்ரிக்கா பந்துவீச்சாளர்களை பந்தாடி ரன் வேட்டை நடத்தினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் திலக் வர்மா 73 ரன்னிலும் (42 பந்து 10 போர், 1 சிக்ஸ்), ஹர்திக் பாண்ட்யா 63 ரன்னிலும் (25 பந்து 5 போர் 5 சிக்ஸ்) வெளியேறினர். அடுத்து சிவம் துபே 2 பந்தில் 10 ரன் அடிக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவிந்தது.
தென் ஆப்ரிக்கா தரப்பில் அதிகபட்சமாக போஸ்க் 2 விக்கெட், பேர்ட்மேன், லிண்டே தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். அடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
