கத்தார்: ஃபிபா இன்டர்கான்டினன்டல் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் நேற்று, பிஎஸ்ஜி அணி, 2-1 என்ற கோல் கணக்கில் பிளெமிங்கோ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஃபிபா இன்டர்கான்டினன்டல் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 2024 முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், 32 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. நடப்பாண்டில் கத்தாரில் அல் ரய்யான் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டிகளின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. அதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) அணியும், பிளெமிங்கோ அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்தன. அதையடுத்து, கூடுதலாக 30 நிமிட நேரம் போட்டி நடத்தப்பட்டது. அதில், இரு அணிகளால் கோல் போட முடியாததால், ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில், 2-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அபார வெற்றி பெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஷூட் அவுட்டில், பிஎஸ்ஜி அணியின் ரஷ்யாவை சேர்ந்த கோல்கீப்பர் மாட்வெய் ஷபனோவ், சிறப்பாக செயல்பட்டு 4 கோல்களை தடுத்ததால் இந்த வெற்றி வசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
