- நைஜீரியர்கள்
- வடக்கு மண்டல IG
- அஸ்ரா கர்க்
- சென்னை
- வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்
- கம்போடியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருள் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்த நைஜீரியர், காம்போ நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேரை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். கல்லூரி மாணவர்கள் மத்தியில் மெத்தப்பெட்டமின், கொக்கைன் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்தது. இளம் மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் இந்த போதை புழக்கத்தையும், விற்பனையும் தடுப்பதற்காகவும், விற்பனை செய்பவர்களை தண்டிப்பதற்காகவும், சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் நடந்த இந்த கண்காணிப்பு அண்டை மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்பட்டு வருகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் அக்டோபர் மாதம் முனீர் (28), ஜாவித் (38) ஆகியோரிடம் 55 கிராம் மெத்தப்பெட்டமின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கையும் களவுமான கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மனவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் இவர்கள் அடிக்கடி மும்பைக்கு சென்று அங்குள்ள தாராவில் இருந்து மெத்தப்பெட்டமின் போதை பொருள் கொள்முதல் செய்து பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 25ம் தேதி சிராஜ் (22) என்ற இன்ஸ்டாகிராம் டான்சரிடம் சோதனை நடத்திய போது, அவரிடம் இருந்து 54 கிராம் மெத்தப்பெட்டமின் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை மணவாள நகர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து போதை பொருள் தமிழகத்திற்கு கடத்தி வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து நைஜீரியா நாட்டை சேர்ந்த நாவாசா வாம்டி (42) என்பவரை அக்டோபர் 25ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப்கள் 2 பாஸ்போர்ட்கள் மற்றும் மருந்து பொருட்கள் 39 கிராம் போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சென்ைனயில் தங்கி இருந்த காங்கோ நாட்டை சேர்ந்த காபிதா யானிக் (36) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், டெல்லி, மும்பை, பெங்களூரு, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் போதை பொருள் விற்பனை செய்யும் டானாக செயல்பட்ட பென்டே (43) என்பவரை 10 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு டெல்லியில் தனிப்படையினர் கைது செய்தனர். அவர் கடந்த 6ம் தேதி திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றதில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைதொடர்ந்து மதீன் அகமதுவை கைது செய்த தனிப்படையினர். அவரிடம் இருந்து 55 கிராம் மெத்தப்பெட்டமைன், 40 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு, சென்னை வழித்தடங்களில் போதை பொருள் விற்பனை செய்தது தொடர்பாக முகமது அப்ரத்(22) என்பரை கைது செய்தனர். இதேபோல், முகமது அப்துல்லா ஆஷா(28) என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது, பெங்களூரில் இருந்து போதை பொருள் மொத்தமாக வாங்கி வந்த தமிழகத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
