×

சென்னையில் நாளை நடைபெறும் உதயநிதி பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால உதவி வழங்கும் விழா நடக்கிறது. இதில் மநீம தலைவர் கமலஹாசன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை மனிதநேய உதய நாளாக பிரமாண்டமாக கொண்டாட சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு முடிவு செய்துள்ளார். பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு கவுரவித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திமுக இளைஞர் அணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மனிதநேய உதய நாளை முன்னிட்டு, கல்லூரி மாணவர் மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்குதல், கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால உதவிகளை வழங்கும் விழா 27ம் தேதி(நாளை) சென்னை வேப்பேரி பெரியார் திடலில் மாலை 6 மணியளவில் நடக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன், மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் துணை தலைவர் முனைவர் பர்வின் சுல்தான் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்கின்றனர். இத்தகவலை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Tags : Kamal Haasan ,Udhayanidhi ,Chennai ,Minister ,P.K. Sekarbabu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Sekarbabu ,Maneema ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு