×

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளருக்கு பயிற்சி

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான நியமன ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். மேலும், எந்த நேரத்திலும், இருந்த இடத்தில் இருந்தவாறு தங்களது பணிகளை தங்குதடையின்றி மேற்கொள்ள ஏதுவாக சட்டத்துறையில் பணியாற்றும் 11 அரசு சார்புச் செயலாளர்களுக்கு 11 மடிக்கணினிகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், கூடுதல் செயலாளர்கள் மகேஷ் குமார், அன்புச் சோழன் மற்றும் சட்டத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,Minister ,Duraimurugan ,Chennai Secretariat ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...