×

2 நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பொதுநூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய 2 சிறப்பு நூலகங்களுக்கு தேவையான நூல்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையார்களிடம் இருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது. www.annacentenarylibrary.org இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் நூல்கள் விவரங்களை 26ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு மாதிரிப் படியை ஜனவரி 5ம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வழங்க வேண்டும். மேலும், தகவல்களுக்கு 044-22201177 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

Tags : Chennai ,Library ,Jayanthi ,Periyar Arivulakam ,Coimbatore ,Kamaraj Arivulakam ,Trichy ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...