×

எடப்பாடி திட்டத்தால் பீகாரில் பாஜ வெற்றி: சிரிக்காமல் சொன்ன வேலுமணி

கோவை: கோவை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ‘‘ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களை அறிவித்து தான் பீகார் தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றார்கள்.

அதிமுகவினர் எஸ்ஐஆர் பணிகளை சரியாக செய்ய வேண்டும். எஸ்ஐஆர் பூர்த்தி செய்யவும், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்க்கவும், புதிய வாக்காளர்களை சேர்க்கவும் அதிமுகவினர் விழிப்புணர்வுடன் களப்பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

Tags : BJP ,Bihar ,Velumani ,Coimbatore ,Coimbatore district ,AIADMK ,minister ,S.P. Velumani ,Bihar elections ,Jayalalithaa ,Edappadi Palaniswami… ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு