- டி.டி.வி.தினகரன்
- அஇஅதிமுக
- வைகை செல்வன்
- சென்னை
- முதல் அமைச்சர்
- எம்.ஜி.ஆர்
- திருவோத்ரியூர்
- குப்பன் எம்.எல்.ஏ.
- கவுன்சிலர்
- கார்த்திக்
- முன்னாள் அமைச்சர்கள்
- வி மூர்த்தி
சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் திருவொற்றியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ குப்பன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் கார்த்திக் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வி.மூர்த்தி, செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
அப்போது வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜ கூட்டணி குறித்து, மேலிட பொறுப்பாளர் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. பல்வேறு கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. மிக விரைவில் கூட்டணி விவரத்தையும், கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை நிலவரங்களையும் அதிமுக பொது செயலாளர் அறிவிப்பார்.
ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு, கூட்டணி பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. விரைவில் தெரியும். தவெக நேற்று துவங்கிய கட்சி. விரைவில் அதன் நிலைப்பாடு தெரியவரும். தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை இல்லை. அதிமுக தான் பெரிய கட்சி. எங்களை நாடித்தான் மற்ற கட்சிகள் வருவார்கள். யாரெல்லாம் வந்துள்ளார்கள் என்பதை மிக விரைவில் அறிவிப்போம்.
மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. 2017ல் இருந்து நான்கரை ஆண்டுகள் கூட்டணியில் பாஜ இருந்தது. அப்போது, அதிமுக நல்லாட்சி தந்துள்ளது. தேசிய கட்சியாக, இந்தியாவை ஆளும் கட்சியாக பாஜ இருந்தாலும், தமிழகத்தின் என்டிஏ கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக தலைவர் எடப்பாடி தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
