×

அதிமுக, பாஜவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை: ஜி.கே.மணி பேட்டி

சேலம்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே தலைவர் ராமதாஸ் தான். கூட்டணி தொடர்பாக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா சார்பில் எங்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை.

பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. கட்சியில் இப்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையால், கடந்த ஓராண்டாக ராமதாஸ் மிகப்பெரிய வேதனையில் உள்ளார். யார் வேண்டுமானாலும் பாமக எனக் கூறி கொள்ளலாம். ஆனால், தமிழக மக்கள் ராமதாஸ் சொன்னால் தான் வாக்களிப்பார்கள். இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நாங்கள் இடம் பெறும் கூட்டணி தான், வெற்றி கூட்டணியாக இருக்கும். இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.

Tags : Adimuka ,BJP ,G. K. ,Salem ,Pamaka Gaurawa ,G. K. Mani ,MLA ,Ramadas ,Batali People's Party ,Bharatiya Janata ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு