×

காற்று சுழற்சி லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நேற்று பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. அத்துடன் தமிழக மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் குறைந்து காணப்பட்டது.

சமவெளிப் பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பைவிட 1-3 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்தது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவியது. அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில், தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மி தமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். இதை நிலை நாளையும் நீடிக்கும்.

Tags : Chennai ,southeast Arabian Sea ,south Kerala ,north Tamil Nadu, ,Chennai… ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு