×

சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

கடலூர்: சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவத்திற்காக கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த பக்தர்களான ராமதாஸ் பத்ரி அட்டாவர், சூர்யகிரண் அட்டாவர் ஆகியோர் நிதிபங்களிப்பில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாஸ்தா கலைக்கூடத்தில் சிவகாமி அம்மனுக்காக சுமார் 21 அடி உயரத்தில் புதிய தேர் தயார் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அன்று சிதம்பரம் நகருக்கு கொண்டு வரப்பட்டு கட்டளை தீட்சிதர் எஸ்.வி.கனகசபாபதி தீட்சிதர் மற்றும் அவரது சகோதரர்கள் முன்னிலையில் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய தேருக்கு புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நான்கு வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த புதிய தேரில் நவ.13-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தின் தேரோட்டம் நிகழ்ச்சியில் சிவகாமசுந்தரி அம்பாள் வீதிவலம் வருகிறார். சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவம் நவ. 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவ.13-ம் தேதி திருத்தேர் உற்சவமும், மாலை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, அம்பாளுக்கு லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. நவ.14-ம் தேதி பட்டு வாங்கும் உற்சவமும் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், உற்சவ அம்பாளுக்கும் மகாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.

நவ.15-ம்ம் தேதி இரவு ஸ்ரீ சிவானந்தநாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யான உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

Tags : Chidambaram Sivakamasundari Amman Temple Terotum Kolakalam ,Chidambaram ,Sivakamasundari Amman ,Temple Terotum ,Karnataka ,Mangalore ,Ramdas Padri ,Attawar ,IPPsi ,Srisivagami Amman Temple ,Thirukkamakotam ,Chidambaram Srinatarajar Temple Sivaganga ,
× RELATED சென்னை மாநகராட்சியில் 96,056 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு!