தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
